சரத்குமார் ரஜினியை தாக்கிப் பேச்சு!
குங்குமம் பத்திரிகையின் சமீபத்திய பதிவில், திருவாளர் சரத்குமார் ஒரு பேட்டிக்காக திருவாய் மலர்ந்திருக்கிறார். அதில், சில முத்துக்களை உதிர்த்தும் உள்ளார்.
MGR-ஐத் தவிர வேறு யாரும் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு திரையுலகில் தகுதி உடையவர் கிடையாது என்கிறார். தமிழ்நாடே ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று என்றோ ஒப்புக்கொண்ட பின் இவர் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று யாரும் அழவும் இல்லை, அவசியமும் இல்லை! ரஜினி தனது மகள் திருமணத்திற்கு அவரை முறையாக(!) அழைக்கவில்லை என்ற காழ்ப்புணர்ச்சியில் தான் இவ்வாறு கூறியிருக்கிறார் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. இதற்கு நேர்மாறாக, நடிகர்கள் ஒருவரை ஒருவர் தங்கள் படங்களில் தாக்காமல், ஒற்றுமையாக இருக்க வேண்டியதை வலியுறுத்துகிறார்! தமாஷ் தான்!
அடுத்து, ரஜினி மேல் விசாரணைக் கமிஷன் வைக்கலாம் என்கிறார். ஏனெனில், முதல்வருக்கு திரையுலகம் எடுத்த பாராட்டு விழாவில், ரஜினி தனக்கு வீரப்பனைப் பற்றி, மற்றவரை விட அதிகம் தெரியும் என்றாராம்! அவற்றை வீரப்பன் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்னமே போலீசுக்கு சொல்லவில்லையாம்! வீரப்பனின் குணநலன்களை(கொடூரம், வஞ்சகம், தந்திரம் போன்றவை) தான் நன்கு உணர்ந்திருந்ததாகப் பொருள் பொதிந்த ரஜினியின் கூற்றை சரத் திரித்துப் பார்க்கிறார். என்ன ஒரு கேலிக்கூத்து?
அடுத்து, தமிழக முதல்வர் திருட்டு விசிடியை ஒழிக்க எடுத்த நடவடிக்கைகள், ஒரு முதல்வர் ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமை என்றும், அதற்காக பாராட்டு விழா எடுத்தது தேவையற்றது என தான் கருதுவதாகவும், அதனாலேயே அவ்விழாவை தான் புறக்கணித்ததாகவும் சரத் கூறியுள்ளார். இவர் தி.மு.க வை சார்ந்த ஒரு M.P. அதனால் தான் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என்பது ஊர் உலகத்திற்கே தெரிந்த ஒரு சங்கதி! கலைஞர் முதல்வராக இருந்து, திரையுலகம் இப்படி ஒரு பாராட்டு விழா எடுத்தால், சரத் அதில் கலந்து கொள்ளாமல் இருப்பாரா என்று யாராவது கேட்டுச் சொன்னால் பரவாயில்லை!!!
அப்படியொன்றும், சத்யராஜ், கார்த்திக் போல சரத் குணச்சித்திர நடிப்பில், பரிமளித்தவரும் அல்லர். KS ரவிக்குமாரின் திரைப்படங்கள் தவிர்த்து, மற்ற படங்களில் ஒரே மாதிரியான(stereo-type) வேடங்களில் அவர் நடிப்பதைப் பார்த்து பார்த்து அலுத்து விட்டது. சரத் பாராளுமன்ற உறுப்பினர் ஆனதிலிருந்து எத்தனை முறை பாராளுமன்றக் கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறார் என்பதையும், அவர் தமிழ்நாட்டுக்காக, குறிப்பாக அவரது தொகுதியின் மேம்பாட்டுக்காக என்ன செய்துள்ளார் என்பதையும் அனைவரும் அறிவர்! இருந்தும், இம்மாதிரி பேட்டிகளில் பிறரைத் தாக்கிப் பேசுவது, அவரது வாடிக்கையாகி விட்டது மிகவும் வேடிக்கையான ஒரு விஷயம் தான்!!!
4 மறுமொழிகள்:
சரத்குமார் இப்படி சூப்பர்ஸ்டாரை தாக்கி பேட்டி கொடுத்திருப்பதை மாயவரத்தான் ரஜினிராம்கி போன்ற ரஜினி ரசிகர்கள் கூட கண்டிக்காதது ஆச்சரியமாக இருக்கிறது. அதுவும் மாயவரத்தான் அவ்வப்பொழுது சன் டிவியின் தவறுகளை சுட்டிக்காட்டி பின்னியிருக்கிறார்!
superb posting...!
«ýÒûÇ À¡Ä¡,
superstar ¦ÀâÂÅá?þø¨Ä Supreeme Star¬?«¾É¡ø¾¡ý §ÀðÊ ÌÎò¾¢Õ측÷.
¸ñÎ측Á §À¡í¸.
சரத் குமார்ன்னா யாரு?! ஓ.. மிஸ்டர் ராதிகாவா? ஸாரி.. அவருக்கெல்லாம் பதில் சொல்லி அவரை பெரியவராக்கணுமா என்ன? இதிலே பயப்படப்போறவங்க தமிழ்குடிதாங்கி பேமிலி தான். என்னடா இது நம்ம ரூட்டை இந்தாளு (மிஸ்டர் ராதிகா!) பிடிச்சிட்டாரேன்னு!
Post a Comment